வெள்ளி, 12 ஜூன், 2015

தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே



மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி !


வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி !


விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!


இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!











தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?


குழியினுள் வாழ்பவரே


இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ?


குழியினுள் வாழ்பவரே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்


உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்




அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்


அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள் ஒருதரம்


உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள்


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்கு கின்றோம்


உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொருசத்தியம் செய்கின்றோம்


உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்


வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்





சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது


சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது


எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது


எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள் எங்கே எங்கே


ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள்






தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்


அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்


உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்


தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்


தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்


எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம் எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்


ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே


மறுபடி உறங்குங்கள் ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா ? குழியினுள் வாழ்பவரே


தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே






கானவரிகள்:- புதுவைரத்தினதுரை


பாடியவர் :- வர்ணராமேஸ்வரன்



















தலைவனின் காலத்தில் நாம்



“வெற்றிகளைப் போராளிகளுக்குக் கொடுங்கள், தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தளபதிகளுக்குச் சொல்லவார்.

“ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்” என்று கூறுவார். ஒரு சண்டை பின்னடைவைச் சந்தித்தால் தவறுகளை ஆராயும் போது முதலில் தன்னிலிருந்துதான் தொடங்குவார். மற்றவர்களிற் பிழைகளைப் போடுவது தலைவர் விரும்பாததொன்று.
இலட்சியத்தையும் – அதற்கான சாவையும் தலைவர் இரண்டு கண்களைப் போலவே போற்றுவார்.
“உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறுவார்.
“இப்படிப்பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் – உயர்ந்தவர்கள்” என்பார். “நானும் உண்மையானவனல்லன்” என்று தன்னைப் பற்றியுங் கூறுவார்.
அவரது இக்கூற்றுக்கள் மாவீரர்களை முதன்மைப்படுத்துவதையும் – இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டையுமே காட்டுகின்றன. தலைவர் பிரபாகரன் அவர்கள் அற்புதமான இராணுவ வல்லுநரென்பதை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அடிமைப்பட்டுத் தலைகுனிந்து கிடந்த தமிழ் இனத்திற்கு வீரத்தையூட்டித் தலைநிமிரவைத்த வரலாற்றுப்பெருமை தலைவரை மட்டுமே சாரும்.
இன்று, தமிழரின் தன்னிகரில்லாத் தலைவனாக அவர் உயர்ந்துள்ளார். அவரின் காலத்தில் நானும் வாழ்கின்றேன்






வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

இன்று வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாலும் தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.....!

இன்று வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாலும் தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளும் கட்டார் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது.....!!!
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
நன்றி
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்



வெள்ளி, 16 ஜனவரி, 2015

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் கட்டார் வாழும் தமிழ்ர்களால் நினைவு கூறப்பட்டது...!



தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் கட்டார் வாழும் தமிழ்ர்களால் நினைவு கூறப்பட்டது...!














கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்)
மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை)
கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்)
கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை)
கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்)

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்

செவ்வாய், 6 ஜனவரி, 2015


மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவு வணக்கநாள் டோகா கட்டார்.....!

06.01.2015

மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்று கட்டாரில் வாழும் தமிழர்களால் நினைவு கூறப்பட்டது இதில் நூற்றுக்கும் மேல்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு டோகா கட்டார்.