வெள்ளி, 12 ஜூன், 2015

தலைவனின் காலத்தில் நாம்



“வெற்றிகளைப் போராளிகளுக்குக் கொடுங்கள், தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” எனத் தளபதிகளுக்குச் சொல்லவார்.

“ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள், மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்” என்று கூறுவார். ஒரு சண்டை பின்னடைவைச் சந்தித்தால் தவறுகளை ஆராயும் போது முதலில் தன்னிலிருந்துதான் தொடங்குவார். மற்றவர்களிற் பிழைகளைப் போடுவது தலைவர் விரும்பாததொன்று.
இலட்சியத்தையும் – அதற்கான சாவையும் தலைவர் இரண்டு கண்களைப் போலவே போற்றுவார்.
“உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காகச் செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்” என்று அடிக்கடி கூறுவார்.
“இப்படிப்பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் – உயர்ந்தவர்கள்” என்பார். “நானும் உண்மையானவனல்லன்” என்று தன்னைப் பற்றியுங் கூறுவார்.
அவரது இக்கூற்றுக்கள் மாவீரர்களை முதன்மைப்படுத்துவதையும் – இலட்சியத்தின் மீதான உறுதிப்பாட்டையுமே காட்டுகின்றன. தலைவர் பிரபாகரன் அவர்கள் அற்புதமான இராணுவ வல்லுநரென்பதை உலகமே ஏற்றுக்கொண்டுவிட்டது. அடிமைப்பட்டுத் தலைகுனிந்து கிடந்த தமிழ் இனத்திற்கு வீரத்தையூட்டித் தலைநிமிரவைத்த வரலாற்றுப்பெருமை தலைவரை மட்டுமே சாரும்.
இன்று, தமிழரின் தன்னிகரில்லாத் தலைவனாக அவர் உயர்ந்துள்ளார். அவரின் காலத்தில் நானும் வாழ்கின்றேன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக