எம்மைப்பற்றி


தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- டோகா, கட்டார்


செயற்பாட்டு யாப்பு:
 தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- டோகா, கட்டார் என்பது, கட்டார் நாட்டில் செயற்ப்பாடும் சட்டப்பிரிவு (60ff ZGB) க்கு அமைவான அரசியல் சமய நடுநிலையான ஒரு நிறுவனம் ஆகும்.

முதலாவது பிரிவு:
01.குறிக்கோள், அதிகாரம்,அங்கத்துவம்.
1.1.பெயர்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- டோகா, கட்டார்.

1.2.முகவரி: நிர்வாகக்குழு செயளாளரின் வதிவிட முகவரி

1.3.தொழிற்படும் எல்லை:கட்டார் நாடும்,இலங்கையில் வடக்கு,கிழக்கும் , அதனோடு இணைந்த ஏனைய பிரதேசங்களும்.
1.4.நோக்கம்:கட்டார் நாட்டில் சமூக ஒருங்கிணைப்பும்,,இலங்கையில் வடக்கு,கிழக்கும் , அதனோடு இணைந்த ஏனைய பிரதேசங்களினதும் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கு உதவுதல்.

1.5.குறிக்கோள்:
1.கட்டார் மற்றும் அதனை அண்மித்திருக்கும் நாடுகளிலுள்ள தமிழர்கள், அவர்களது குடும்ப அங்கத்தவர்களினதும் சமூக ஒருங்கிணைப்பும்,கட்டார் நாட்டிலுள்ள பிற சமூகத்துடனான சமுக ஒருங்கிணைப்பும்.

2. இலங்கையில் வடக்கு,கிழக்கும் , அதனோடு இணைந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகளின்,உட்கட்டமைப்பு,உபகரணங்கள்,மற்றும் வசதிகள் மற்றும் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்கு உதவுதல்.

3.பந்தி 2 இல் குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பாடசாலை,பல்கலைக்கழக மாணவர்களது கல்வி தொடர்பான தேவைகளுக்கு உதவுதல்.
4.பந்தி 2 இல் குறிப்பிட்ட பிரதேச சமூக,கலாச்சார மேம்பாட்டிற்கு உதவுதல்,அடிப்படை வாழ்க்கைத் தரத்தை உயா்த்த உதவுதல் மற்றும் தொழில் முயற்சிகளிற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலான உதவி வழங்கல்.

5.இலங்கையிலும்,ஏனைய நாடுகளிலுமுள்ள தமிழா் ஒருங்கிணைப்புச் சங்கங்களுடன் இணைந்து செயற்படுதல்.

1.6.அதிகாரம்:

1.6.1.அங்கத்தவரிடமிருந்து நிதி திரட்டும் அதிகாரம்.
1.6.2.சங்கத்தின் குறிக்கோளை அடைதல்.
1.6.3.தனியார்,மற்றும் நிறுவனங்கள்,அமைப்புக்களிடமிருந்து நிதி திரட்டும் அதிகாரம்.
1.6.4.சங்கத்திற்கென சொத்துகளினை உருவாக்கும், அவற்றினைப் பராமரிக்கும் அதிகாரம்.

1.7அங்கத்துவம்:
கட்டார் நாட்டிலும்,அதன் அயல்நாடுகளிலும்(விரும்பின்) வாழும் எம் தமிழ் சமூகத்தினரும்,அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் அங்கத்துவத்தினைப் பெறமுடியும்.

இரண்டாம் பிரிவு:

2.1.நிதியீட்டம்:
1.அங்கத்துவப் பணம்(காலாண்டு பொதுக்கூட்டத்தில் பிரேரித்து ஏற்றுக்கொள்ளப்படும்)

2. கட்டார் நாட்டிலும் ,ஏனைய நாடுகளிலும் வாழும் தனிநபர்கள்,அந்நாடுகளிலுள்ள நிறுவனங்கள்,அமைப்புக்கள் ஆகியவற்றின் நன்கொடைகள்.
3.வேறு வழிகள்..

2.2.பணப்பாவனை :
2.2.1 கட்டார் நாட்டிலுள்ள வங்கியொன்றில் கணக்கொன்றினை ஆரம்பித்து கொடுக்கல்,வாங்கல்கள் மேற்கொள்ளப்படும்.

2.2.2 வங்கிக் கணக்கிலிருந்து தலைவர் அல்லது செயலாளருடன்,பொருளாளர் ஒப்பமிட்டு பணத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2.2.3 உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவரால் மாதாந்தக் கணக்காய்வும்,காலாண்டு,வருடாந்தக் கணக்காய்வும் செய்யப்படல் வேண்டும்.

2.2.4 நிதி ஆண்டு ஜனவரி 01 தொடக்கம் டிசம்பர் 31 வரையாகும்.

2.2.5 நிதியாண்டு முடிவடைந்து ஒருமாத காலத்தினுள் வருடாந்தக் கணக்காய்வு செய்யப்படவேண்டும்.

2.3 பேணப்படவேண்டிய அறிக்கைகள்:
1.அங்கத்தவர் பெயர்ப்பட்டியல்.
2.அறிக்கைப்புத்தகங்கள்(பொதுச்சபை,நிர்வாகசபை)
3.கூட்ட அங்கத்தவர் வருகைப்பதிவு.
4.கணக்கறிக்கைகள்,நிதி வரவு,செலவுப்பதிவேடுகள்.
5.வங்கி தொடர்பான அறிக்கைகள்,பற்றுச்சீட்டுப் புத்தகங்கள்.

மூன்றாம் பிரிவு:
3.1 செயற்திட்டங்களினை அடையாளம் காணுதலும்,நடைமுறைப்படுத்துதலும்.
இலங்கையில் வடக்கு,கிழக்கும் , அதனோடு இணைந்த ஏனைய பிரதேசங்களும். நடைமுறைப்படுத்தப்படும் சங்கத்தின் நோக்கத்திற்கேற்றவாறான செயற்திட்டங்கள்,அங்குள்ள பாடசாலை அதிபர்கள்,பழையமாணவர் சங்கங்கள்.மற்றும் பொதுஅமைப்புக்களின் எழுத்து மூலமான வேண்டுதலின் அடிப்படையில் நிர்வாகக் குழுவின் முடிவின் அடிப்படையில்,அங்குள்ள பழையமாணவர் சங்கங்கள்.மற்றும் பொதுஅமைப்புக்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும்.

நான்காம் பிரிவு
4.1.சங்க நிர்வாகம்:
4.1.1.தலைவர்,செயலாளர்,உப தலைவர்,உப செயலாளர்,பொருளாளர்,உட்பட 18 வயதிற்கு மேற்பட்ட 15 பேர் கொண்ட நிர்வாகக்குழு செயற்ப்படும்.

4.1.2. நிர்வாகக் குழுக்கூட்டங்கள் ஆகக்குறைந்தது மூன்று மாதகாலத்திற்கொருமுறை நடைபெறும்.தேவைக்கேற்ப நிர்வாகக் குழுக் கூட்டங்களினை அதிகரிக்கவும் குறைக்கவும் தலைவருக்கு அதிகாரமுண்டு. வரவு 50% ற்கு மேல் இருத்தல் வேண்டும்.

4.1.3 இந் நிர்வாகக்குழு வருடாந்தம் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்படும்.

4.2.ஆலோசனைக் குழு:
தேவைக்கேற்ப ஆலோசனையாளர்களினைச் சேர்த்துக்கொள்ளும் அதிகாரம் பொதுச்சபைக்கு உண்டு.

4.3. உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவர் அல்லது இருவர் தேவைக்கேற்ப பொதுச்சபையால் நியமிக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக